நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வரும் ஜனாதிபதி - ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 01:50 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக்கூறி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சட்ட செயலாளரும், பொரளை தொகுதி பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில், நாட்டினுடைய பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.

எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது, இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால், ஜனாதிபதியோ மக்கள் வினோதத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதாகவும், வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகிறார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு கூறுகிறாரா? இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர் மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் போலி பேரணிகளை நடத்தி வருகிறது.

இந்த அரசாங்கத்திற்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில்...

2026-10-08 20:32:46
news-image

கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விரைவில்...

2026-10-08 17:06:21
news-image

பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை ;...

2026-10-08 17:20:55
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது அரசியல் தேவைக்காக...

2026-10-08 17:21:37
news-image

ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சியின் இரட்டை நிலைப்பாடு...

2026-10-08 17:03:17
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ;...

2026-10-08 20:28:28
news-image

2500 ஆண்டுகால பௌத்த பாரம்பரியத்தின் மீது...

2026-10-08 17:01:03
news-image

பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை...

2026-10-08 14:34:02
news-image

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட...

2026-10-08 21:48:37
news-image

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் உள்ளக...

2026-10-08 17:53:12
news-image

ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் அரச...

2026-10-08 16:59:39
news-image

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி...

2026-10-08 21:31:22