இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெறவுள்ள கார் பந்தயத்தைக் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அந்த பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை (10) சென்னையிலிருந்து விஜய் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய் இங்கிலாந்துக்கு சென்ற பின்னர், அங்கு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் ஓர் அம்சமாக, அங்கு நடைபெறவுள்ள Michelin Le Mans Cup கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அந்த கார் பந்தயத்தில் இந்திய முன்னணி நடிகரும் கார் ஓட்ட வீரருமான அஜித் குமாரின் குழுவினரும் பங்கேற்வுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் விஜய் மேற்கொண்டுள்ள இந்த இங்கிலாந்து விஜயத்தின்போது, லண்டனில் ஒரு கார் ஓட்டப் பந்தயத்தில் நடிகரும் தனது உற்ற நண்பருமான அஜித் குமாரை சந்திக்கவுள்ளமை தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இரண்டு பெரும் திரை நட்சத்திரங்கள் ஒரு நிகழ்வில் சந்திக்கவிருப்பதும், விஜய் முதல்வராக கார் பந்தயத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைப்பதும், போட்டியாளர்கள் தரப்பில் அஜித் குமார் பங்கேற்பதும் சுவாரஸ்யமான தருணமாக இருக்கக்கூடும் என பேசப்படுகிறது.
அந்த கார் பந்தயமானது விஜய், அஜித் இருவரும் சந்தித்து பரஸ்பரம் நட்பினை வெளிப்படுத்திக்கொள்ளும் அழகிய நிகழ்வாக அமையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM