நேபாள வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,377 ஆக அதிகரிப்பு ; 4,996 பேரைக் காணவில்லை

Published By: P. Saranya

11 Sep, 2026 | 05:04 PM
image

நேபாள - திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆ்ம திகதி பனிப்பாறை உடைந்து போட்டேகேஷி நதியில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் 4,996 பேரைக் காணவில்லை என அந்நாட்டு தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 08 மாவட்டங்களில் இருந்து மீட்புக் குழுவினர் இதுவரை 1,355 சடலங்களை கண்டெடுத்துள்ளனர். சித்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 363 பேரும், கிழக்கு நவல்வராசியில் 222 பேரும், மேற்கு நவல்வராசியில் 221 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காணாமல்போன 4,996 பேரில், நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த 2,340 பேரும், ரசுவா மாவட்டத்தைச் சேர்ந்த 1,967 பேரும் அடங்குவர். இதில் 589 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 100 பாதுகாப்புப் படை அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள இராணுவத்தின் 9,287 வீரர்கள், பொலிஸாரின் 7,912 பேர் மற்றும் ஆயுதப் பொலிஸ் படையின் 4,203 பேர் உட்பட 21,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மலைப் பகுதிகளில் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காத்மாண்டுவிலிருந்து இயங்கும் இராணுவ மற்றும் தனியார் ஹெலிகொப்டர்கள் மூலம் இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தினால் சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட ஆரம்பக்கட்ட இழப்பு ரூ. 387.5 பில்லியன் (2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு அவசர நிதியாக ரூ. 160 மில்லியனை நேபாள அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 3,500 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் 39 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரசுவா பகுதியில் 78%, நுவாகோட்டில் 96 சதவீத மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்புக் கோபுரங்களின் 98 சதவீத சேவைகள் மீளமைக்கப்பட்டுள்ளன.

எனினும், இமயமலை மலைப்பாதைகளில் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவுகள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளமை நிவாரணப் பொருட்களைக் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதில் பெரும் சவாலாக உள்ளது என மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில்...

2026-10-15 19:31:52
news-image

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ...

2026-10-15 17:30:53
news-image

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடும் மழை,...

2026-10-15 15:08:25
news-image

பாகிஸ்தானில் பாடசாலைக் கூரை இடிந்து விழுந்ததில்...

2026-10-15 13:50:42
news-image

சீனா – வடகொரியா இடையே புதிய...

2026-10-15 11:17:18
news-image

அமெரிக்காவில் இந்து வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்...

2026-10-15 10:41:11
news-image

அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள 'நவி'...

2026-10-15 10:00:10
news-image

கென்யாவில் இரண்டாவது எபோலா நோயாளி அடையாளம்...

2026-10-15 09:26:34
news-image

புளோரிடா வானில் தோன்றிய ‘ஸ்பேஸ் ஜெல்லி...

2026-10-14 17:30:47
news-image

சிறுமி மீது பாலியல் ரீதியாக அத்துமீறிய...

2026-10-14 16:47:35
news-image

இந்தியாவில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து...

2026-10-14 14:47:06
news-image

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு 06 பேர்...

2026-10-14 10:52:17