தமிழ்நாட்டுக்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று வியாழக்கிழமை (10) இங்கிலாந்துக்கு பயணமானதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று சென்னையிலிருந்து புறப்பட்ட விஜய் தலைமையிலான குழு, துபாய் வழியாக லண்டன் சென்றடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் செல்லும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை பிரிட்டனில் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய், செப்டம்பர் 17ஆம் திகதி இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியாவுக்குத் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் தலைமையில் பிரிட்டனுக்குச் செல்லும் குழுவினரில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலர் மேகநாத ரெட்டி உட்பட முக்கிய அரசு உயர்மட்ட அதிகாரிகள் அடங்குவர்.
பிரிட்டனில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் இந்தியாவின் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EV), மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், ஆடைகள், தோல்பொருட்கள், பொறியியல் மற்றும் சேவைத்துறைகளில் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்தல் என்பன விஜயின் பயண நோக்கங்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், லண்டன் சுற்றுப்பயணத்தின்போது தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரமொன்றை அமைப்பது தொடர்பான சட்டப்பேரவை அறிவிப்பைச் செயற்படுத்தும் விதமாக, லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' (Silverstone Circuit) வளாகத்தை முதலமைச்சர் நேரில் சென்று விஜய் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் லண்டனில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுப்பாதை வடிவமைப்பு மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM