இருபத்து இரண்டு வயது இளம் நாட்டுப்புறப் பாடகியான ஹர்ஷிதா தாஹியா நேற்று (17) மாலை மர்ம நபர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஹரியானாவைச் சேர்ந்த இவர், பானிபட் அருகே கிராமம் ஒன்றின் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஹர்ஷிதாவின் காரை வழிமறித்தனர். கார் சாரதி மற்றும் ஹர்ஷிதாவின் சக பாடகி உட்பட காரில் இருந்த மூவரையும் பலவந்தமாக இறக்கிய அவர்கள், ஹர்ஷிதாவைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். அதில், சம்பவ இடத்திலேயே ஹர்ஷிதா உயிரிழந்தார்.

இந்நிலையில், ஹர்ஷிதாவின் சகோதரி லதா, தனது சகோதரியைக் கொன்றது தனது கணவனே என்று அதிரடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

லதாவின் கணவரான தினேஷ், தற்போது திஹார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஹர்ஷிதாவை வல்லுறவுக்கு உட்படுத்தியபின் அவரது தாயாரையும் கொலை செய்தார் தினேஷ்.

“எமது தாயைக் கொலை செய்ததற்கு எனது சகோதரியே ஒரே சாட்சி. அதனால்தான் அவரை எனது கணவர் கொலை செய்திருக்கவேண்டும்” என்று லதா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.