'சிங்கம்' படத்தில் பொலிஸ் அதிகாரி துரைசிங்கத்தின் காதலியாக வந்தார் அனுஷ்கா. 'சிங்கம் 2' சூர்யாவுக்க நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். சூர்யாவை ஒருதலையாக காதலித்து ஹன்சிகா இறுதியில் இறந்து விடுவார். தற்போது 'சிங்கம் 3' கதையும் முந்தைய கதைகளின் தொடர்ச்சி என்பதால் இதிலும் அனுஷ்கா நடித்தே ஆகவேண்டும் என்ற நிலை உருவானது. எனவே, இதில் சூர்யாவின் மனைவியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.

சூர்யாவை திருமணமாகாதவர் என்று நினைத்து ஒரு தலையாய் காதலிக்கும் சி.ஐ.டி. பொலிஸாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். எனவே, 'டூயட்' பாட்டெல்லாம் ஸ்ருதிக்குத்தானாம். அனுஷ்காவுக்கு அவ்வளவு வேலை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முதல் இரண்டு பாகத்துக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். மூன்றாம் பாகத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னை ராயபுரம் துறைமுக பகுதியில் நடப்பதாக இருந்தது. சென்னையில் பெய்த மழை வெள்ளம் காரணமாக முதல்கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் விசாகபட்டினத்தில் தொடங்குகிறது.

சிங்கம் 'சீரிஸ்' படங்களுக்கு வில்லன்கள் 'பவர்புல்லாக' இருப்பார்கள். முதல் பாகத்தில் அரசியல்வாதி பிரகாஷ்ராஜ், இரண்டாம் பாகத்தில் சர்வதேச கடத்தல்காரன் ஆப்பிரிக்க நாட்டு நடிகர், இந்த பாகத்தில் வில்லன் யார் என்பதை 'சஸ்பென்சாக' வைத்திருக்கிறார்கள்.