'ஷிரான் பாசிக்கின் சகாவுக்குச் சொந்தமான 10 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

Published By: L. Abhilashani

11 Sep, 2026 | 09:51 AM
image

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின்  நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும்  உடமைககளை முடக்குவதற்குச்  குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும்  உடமைகள்  முடக்கப்பட்டுள்ளன.

விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட  சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க  அதிகாரிகள் நடவடிக்கை  எடுத்துள்ளனர்.

அதற்கமைய கடவத்த பகுதியில் அமைந்துள்ள 19.90 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடி வீடு, களனி பகுதியில் அமைந்துள்ள 18 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடி வீடு ஆகிய சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. 

குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த உத்தரவை நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச்  குற்றவரும்படி விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13