சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ரூ.1,104 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை!

11 Sep, 2026 | 09:33 AM
image

(மனோகரன் பிரியங்கா) 

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 1,104 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் 978.9 மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளும் காணிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கப்பட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களும் 14 மில்லியன் ரூபா பணமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச பொலிஸாரின் ‘சிவப்பு எச்சரிக்கை’  பிறப்பிக்கப்பட்ட 43 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதே காலப்பகுதியில், சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாத 38 குற்றவாளிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 95 பேர் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

 '1818' என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகப் பல குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்து வருகின்றன. 

இந்தத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுவரை 7,071 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

 கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 9,105 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திடீர் மின்வெட்டு காரணமாக எரிபொருள் விநியோகத்தில்...

2026-10-17 17:18:37
news-image

இரத்மலானை விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை...

2026-10-17 17:06:39
news-image

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப்...

2026-10-17 17:01:52
news-image

நீர் விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

2026-10-17 16:22:07
news-image

பார்வைக் குறைபாடுள்ள 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு...

2026-10-17 16:06:38
news-image

அம்பலாந்தோட்டையில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற...

2026-10-17 15:53:20
news-image

மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு வதந்தி...

2026-10-17 15:55:26
news-image

கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை...

2026-10-17 15:23:23
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலை பரிசோதனையில் வெளிநாட்டுப்...

2026-10-17 15:10:40
news-image

கொழும்பில் கடத்தல் தங்கத்துடன் மூன்று இந்தியப்...

2026-10-17 14:29:22
news-image

அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு...

2026-10-17 14:58:02
news-image

மாகாண சபைத் தேர்தல், காணி உரிமை...

2026-10-17 14:27:40