சுப்பர் லீக் முதல் சுற்றை ஆறுதல் வெற்றியுடன் நிறைவுசெய்யும் குறிக்கோளுடன் நியூ யங்ஸ் - டிபெண்டர்ஸ் மோதவுள்ளன

10 Sep, 2026 | 08:41 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் சம்பியன்ஷிப் கால்பந்தாட்டத்தின் முதல் சுற்று கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஏழு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்றுவந்த முதல் சுற்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும்.

இந் நிலையில் தரமிறக்கல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள டிபெண்டர்ஸ் கழகமும் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகமும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் மோதவுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்ய கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

நியூ யங்ஸ் கழகம் இதுவரை 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற பெறுபேறுகளுடன் 5 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்தில் இருக்கிறது.

டிபெண்டர்ஸ் கழகம் ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் 4 புள்ளிக்ளைப் பெற்று 9ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி 8ஆவது இடத்தை உறுதி செய்துகொள்ளும்.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் நியூ யங்ஸ் 8ஆவது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்.

எவ்வாறாயினும் இந்த இரண்டு அணிகளில் டிபெண்டர்ஸ் கழகம் சற்று பலம்வாய்ந்த அணியாகத் தென்படுவதால் அக் கழகத்திற்கு வெற்றிகிட்டும் என நம்பப்படுகிறது.

டிபெண்டர்ஸ் கழகம் தனது 7 போட்டிகளில் 7 கோல்களைப் போட்டுள்ளதுடன் 17 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நியூ யங்ஸ் வீரர்கள் சோர்வுடன் விளையாடிதைக் காண முடிந்தது. நாளைய போட்டியில் அவர்கள் வெற்றிபெறுவதாக இருந்தால் ஆரம்பம் முதல் கடைசிவரை உற்சாகத்துடனும் விடாமுயற்சியுடனும்  விளையாட வேண்டும்.

நியூ யங்ஸ் கழகம் அதன் 7 போட்டிகளில் 7 கோல்களைப் போட்டுள்ள அதேவேளை எதிரணிகளுக்கு 32 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28