ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

10 Sep, 2026 | 07:13 PM
image

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே  சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மத ரீதியான வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் குறித்து  இச்சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை கத்தோலிக்க மதத்  தலைவர்கள் பாராட்டியதுடன், இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கத்தோலிக்க சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும் அருட்தந்தைமார்,  ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட  பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 16:16:14
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13