பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு ; குறைகேள் மையமாகச் செயற்படும் தேசிய ஆணைக்குழு – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

10 Sep, 2026 | 07:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் தீர்வினை  வழங்குவதற்கு குறைகேள் மையமாக பெண்களை வலுப்படுத்தும் தேசிய ஆணைக்குழு செயற்படும். பெண்களுக்கு எதிரான அனைத்து பாதிப்புகளையும் ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைக்கு இணங்க இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த ஆணைக்குழுவின் கட்டமைப்பு பெரிதும் உதவும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

2024ஆம் ஆண்டு 34ஆம் இலக்க பெண்களை வலுப்படுத்தும் சட்டத்தில் 13வது சரத்து மற்றும் 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க பெண்களை வலுப்படுத்தும் தேசிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை தீர்மானிப்பது தொடர்பான யோசனை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக முன்மொழிந்துள்ளேன்.

மேற்படி பாராளுமன்றம்  2024ஆம் ஆண்டு  37ஆம் இலக்க பெண்களை வலுப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றும்போது அது ஒரு சாதாரண சட்டமாக மட்டுமன்றி நாட்டின் சனத்தொகையில் 52 வீதமாக காணப்படும் பெண்களின்  உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க உருவாக்கப்பட்டது. 

ஆனைக்குழுவின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அந்த பணத்தை நேரடியாக திரட்டப்பட்ட நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்றும் இந்த சட்டம் தெளிவாக கூறுகின்றது. 

இலங்கையின் சமூகக் கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அபிவிருத்தி நெறிமுறைகளுக்கு முக்கியமான ஒரு பிரேரணையாக இது சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. 

இதுவரை காலமும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வந்த மகளிர் பணியகத்திற்கு அப்பால் இந்த மகளிர் ஆணைக்குழு நியமிக்கப்படுகின்றது. 

இதுவரை இல்லாத சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் எமது அமைச்சின் கீழ் ஒரு திணைக்களமாக இயங்கி வந்த  மகளிர் பணியகத்துக்கு இல்லாத சட்ட ரீதியான அங்கீகாரம் மற்றும் சட்டமூலங்களை அங்கீகரிக்கும் தீர்மானம் இந்த ஆணைக் குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

பெண்கள் தொடர்பான பிணக்குகளை விசாரணை செய்து தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு இதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக உத்தரவுகளை விடுப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாலின ரீதியான வன்முறைகளும் வேலைத்தளத்தில் காணப்படும் துன்புறுத்தல்களும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் மறைமுக இழப்பை ஏற்படுத்துகின்ற நிலையை நாம் உணர்கின்றோம். 

பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் தீர்வினையும் வழங்குவதற்கு குறைகேள் மையமாக இந்த ஆணைக்குழு செயற்படும் என்பதைக் குறிப்பிட முடியும்.

பெண்களுக்கு எதிரான அனைத்து பாதிப்புகளையும் ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைக்கு இணங்க இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற  இக்கட்டமைப்பு உதவுகின்றது. நாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமுதாய பாதுகாப்பு மட்டுமன்றி நாட்டின் சகல இனங்களுக்குமான பொருளாதார அபிவிருத்தி, சமமான வாழ்வு மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இது ஒரு முக்கிய தேவையாக காணப்படுகிறது.

அந்த வகையில் பெண்களை வலுவூட்டுவதன் மூலம் மாத்திரம்தான் குடும்பங்களில் நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளை மாற்ற முடியும். பெண்களுக்கான சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் முக்கிய பங்காக அமைகிறது. 

எனவே ஒரு வலுவான சுயாதீனமான தேசிய மகளிர் ஆணைக்குழுவில் முதலீடு செய்வது நாட்டின் பொருளாதார உற்பத்தித் திறன் சமூக நீதி மற்றும் சமூக அபிவிருத்திக்கும் அபரிமிதமான பங்களிப்புகளைத் தரும் என்பதையும் பெண்களின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுள்ள இந்த ஆணைக்குழுவை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் இத்தீர்மானம் மிகவும் அவசியமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13