(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு வகையான சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை அணி, அதற்கு முன்னதாக இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.
இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் இங்கிலாந்து லயன்ஸ் அணியை இலங்கை எதிர்த்தாடும்.
முதலாவது ரி20 பயிற்சிப் போட்டி செல்ஸ்போர்ட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நாளை வெள்ளிக்கிழமை (11) இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது பயிற்சிப் போட்டி பெக்கன்ஹாம் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடர் சவுத்ஹாம்ப்டன் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து கார்டிவ் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 17ஆம் திகதி இரண்டாவது போட்டியும் மென்செஸ்டர் ஓல்ட் ட்ரபர்ட் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 19ஆம் திகதி கடைசிப் போட்டியும் நடைபெறும்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் (செப். 22), லீட்ஸ் (செப். 24), தி ஓவல் (செப். 27) ஆகிய விளையாட்டரங்குகளில் நடைபெறும்.
இலங்கை ரி20 குழாம்
சரித் அசலன்க (தலைவர்), கமில் மிஷார, பெத்தும் நிஸ்ஸன்க, பவன் ரத்நாயக்க, லஹிரு உதார, வனிந்து ஹசரங்க, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், தரிந்து ரத்நாயக்க, தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க, ஏஷான் மாலிங்க, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார, துனித் வெல்லாலகே.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM