(செ.சுபதர்ஷனி)
கொழும்பு துறைமுகத்தின் சிஐசி ரி முனையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரு கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகளில் இடம்பெற்ற குறைபாடுகள் குறித்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இரு கொள்கலன்களில் பெருமளவிலான போதைப்பொருள் மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் சில குறைபாடுகளும் கவனயீனங்களும் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைவாக, அது தொடர்பில் கண்டறிவதற்காக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த உள்வீட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போதைப்பொருளுடன் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் பிரதான விசாரணைகளுக்கு இந்த விசாரணையால் எவ்வித தடையும் ஏற்படாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரதான விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM