(நெவில் அன்தனி)
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கான ஆண்கள் பிரிவு குறும் பட்டியலில் இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரர் சொனால் தினூஷ இடம்பெறுகிறார்.
அவருடன் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஒல்லி ரொபின்சன், பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இந்தியாவின் பலம் வாய்ந்த பந்து வீச்சுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்கள், ஒரு அரைச் சதத்தை சொனால் தினூஷ விளாசி இருந்தார்.
காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் 100 ஓட்டங்களைப் பெற்று கன்னி சதத்தைப் பூர்த்தி செய்த சொனால் தினூஷ, இரண்டாவது இன்னிங்ஸில் 84 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களையும் பலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 133 ஓட்டங்களையும் பெற்று இலங்கையை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
அவர் இந்தத் தொடரில் 140.00 என்ற சராரியுடன் 420 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார்.
இங்கிலாந்து வீரர் ஒல்லி ரொபின்சன், கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா 8 விக்கெட்கள் வீதம் மொத்தமாக 16 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலியாவுடன் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் வீரர் ஹசன் மஹ்முத் 9 விக்கெட்களை வீழ்த்தினார்.
டார்வின் விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களாதேஷ் ஈட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் அவர் பெரும் பங்காற்றி இருந்தார்.
பெண்களுக்கான குறும்பட்டியல்
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீராங்கனைக்கான குறும்பட்டியலில் தாய்லாந்து வீராங்கனைகள் இருவரும் ஐல் ஒவ் மான் வீராங்கனை ஒருவரும் இடம்பெறுகின்றனர்.
மகளிர் சர்வதேச ஒருநாள் மற்றும் மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் தாய்லாந்து வீராங்கனை சுலீபோன் லாஓமி பிரகாசித்திருந்தார். இந்தியாவுக்கு எதிரான மகளிர் ரி20 ஆசிய கிண்ணப் போட்டியில் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதற்கு முன்னர் பப்புவா நியூ கினியுடனான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.
மற்றொரு தாய்லாந்து வீராங்கனையான நன்னாபத் கொன்ச்சாரோன்காய் இருவகை கிரிக்கெட் தொடர்களில் துடுப்பாட்டத்தில் அசத்தி இருந்தார். பப்புவா நியூ கினியுடனான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 121 ஓட்டங்களையும் மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரில் 144 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
நோர்வேக்கு எதிரான மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரில் அபரிமிதமான துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய ஐல் ஒவ் மான் கிரிக்கெட் வீராங்கனை லூசி பானட், நான்கு இன்னிங்ஸ்களில் ஆட்டம் இழக்காத 123 ஓட்டங்கள் உட்பட 257 ஓட்டங்களைக் குவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM