இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம்

10 Sep, 2026 | 03:49 PM
image

இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08  நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா நீரிணை பகுதியில் உள்ள  'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை  கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு வெடித்து சிதறியது.

இந்நிலையில், வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு  மூலம் புறப்பட்டுச் சென்ற 05 புகைப்பட ஊடகவியலாளர்கள், 02 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உட்பட 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பின்னர் இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில்  நடுக் கடலில் மாயமான ஊடகவியலாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேஷிய கடலோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார்...

2026-10-11 17:07:35
news-image

நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர்...

2026-10-11 15:53:34
news-image

ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது...

2026-10-11 11:59:13
news-image

மண்சரிவால் வெள்ளப்பெருக்கு ; நேபாளத்தில் கிராம...

2026-10-11 12:21:55
news-image

ரஷ்ய ஆய்வக ஊழியரின் மரணத்துக்கான காரணம்...

2026-10-11 11:15:29
news-image

மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டுவதற்கான 'நவி'...

2026-10-11 12:25:21
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட...

2026-10-11 09:39:04
news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12