(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டில் எல் நினோ நிலைமையால் தற்போது பல மாவட்டங்களிலும் நிலவும் வறட்சியான காலநிலை இம்மாத இறுதியில் இருந்து குறைவடைந்தாலும் அடுத்த ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்காத அளவுக்கு கடுமையான வறட்சி நிலைமை ஏற்படலாம். இவ்வாறான நிலையில் ஏற்படக்கூடிய நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் எல்- நினோ தாக்கத்தால் நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களுக்கமைய 8 மாவட்டங்களில் 36 பிரதேச செயலகங்களில் 44,945 வரையிலான குடும்பங்கள் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கு பௌசர் உள்ளிட்ட வழிகளில் நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
352 நீர் விநியோக திட்டங்களில் இரண்டில் மட்டுமே நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்களுக்கு 24 மணிநேர நீர்விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கட்டம் கட்டமாக விநியோகங்கள் நடக்கின்றன.அத்துடன் களனி கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர்நிலைகளில் நீர் மட்டம் போதுமானதாக உள்ளதால் மேல்மாகாணத்தில் நீர்விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படவில்லை.
இதேவேளை எல்-நினோ நிலைமைகளால் கிணறுகள் உள்ளிட்ட சிறிய நீர்நிலைகள் வற்றும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு நீரை விநியோகிக்க தேவையான வேலைத்திட்டங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. எல்-நினோ நிலைமையால் ஏற்பட்டுள்ள தற்போதைய வறட்சியான காலநிலை செப்டம்பர் இறுதியில் குறைவடையும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழையுடன் காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த வருடத்தில் பெப்ரவரி, மார்ச்,ஏப்ரல் மாவட்டங்களில் வழமையாக வறட்சியான காலநிலையே எமது நாட்டில் இருக்கும். ஆனால் 2027 இல் குறிப்பிட்ட மூன்று மாதங்களிலும் எதிர்பார்க்காத அளவுக்கு வறட்சியான காலநிலையை அனுபவிக்க நேரிடும் என்றே எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால் இப்போது எதிர்நோக்கியுள்ள நீர் பிரச்சினை மீண்டும் குறித்த மூன்று மாதங்களில் ஏற்படும். இதற்காக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும் கைவிடப்பட்ட கிணறுகளை சுத்திகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் குழாய் கிணறுகள் உள்ளிட்ட கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நிலத்தடி நீர் பராமரிப்பு தொடர்பிலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அமைச்சின் உப குழுக்கள் இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM