திருகோணமலை, மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 820 கிலோகிராம் எடையுடைய மீன் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை கப்பல் பெரகும்பா நிறுவனத்துக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், கடற்படை கப்பல் கோகண்ன நிறுவனத்துடன் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மூதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியொன்று கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
லொறியை பரிசோதித்தபோது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 820 கிலோகிராம் எடையுடைய மீன் தொகை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய பொடுவைகட்டு செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர், லொறி மற்றும் மீன் தொகை ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மூதூர் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM