உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளரும், பதவியிழந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஜெட், தன் மீதான நிதி முறைகேடு மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் புதன்கிழமை (09) தனது பதவி விலகல் கடிதத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸிடம் சமர்ப்பித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகால பதவிக் காலத்திற்காகத் தெரிவுசெய்யப்பட்ட சைமா வாஜெட் மீது, பங்களாதேஷ் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோசடி மற்றும் ஆவண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜூலை முதல் அவர் சம்பளமில்லாத கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
சீனாவுக்கான பயணத்தின்போது 901 அமெரிக்க டொலர் நிதி முறைகேடு செய்ததாகவும், தனது கல்வித் தகுதிகளை தவறாகச் சித்தரித்ததாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சார்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், பங்களாதேஷில் சட்டவிரோதமாகக் காணியொன்றைப் பெற்றதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சைமா வாஜெட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைத்துவத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தான் கொண்டிருந்த “நம்பிக்கை மற்றும் மரியாதையை முற்றாக இழந்துவிட்டதாக” சைமா வாஜெட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக சம்பளமின்றி விடுப்பில் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி மற்றும் தனது பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத சூழல் காரணமாகவே பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சைமா வாஜெட் தாமாகப் பதவி விலகுவதற்கு முன்னரே, அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்தியத்துக்கான புதிய பணிப்பாளரைத் தெரிவுசெய்வதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டு, டிசம்பர் மாதத்தில் வேட்பாளர்கள் பரிசீலிக்கப்பட்டு, 2027ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி உத்தியோகபூர்வத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM