எம்முடைய பிள்ளைகளில் சிலர் உதை பந்தாட்டம், கூடை பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு பெற்றோர்களும் ,ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் ஊக்கமும் அளிப்பர். இவர்களில் சிலருக்கு திடீரென்று கால் மூட்டு பகுதிக்கு கீழ் வலி அல்லது வீக்க பாதிப்பு ஏற்படும். இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் ஓஸ்குட்- ஸ்க்லாட்டர் நோய் என வகைப்படுத்தப்பட்டு, முழுமையான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக பிறக்கும் எல்லோருக்கும் பருவ வயது அதாவது 19 வயது வரை உடல் வளர்ச்சி இருக்கும் என்பார்கள். அதிலும் சிலர் இளம் வயதிலேயே அதாவது ஐந்து அல்லது ஆறு வயதிலேயே விளையாட்டுகளில் ஈடுபடுவதுண்டு.
அதிலும் குறிப்பாக குதித்து விளையாடும் பூப்பந்து, கூடை பந்து, உதை பந்தாட்டம், கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுபடுவர். இவர்களுக்கு இத்தகைய அரிய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
தொடை பகுதியில் இருந்து கால் எலும்பு மூட்டுக்கு கீழ் பகுதியை இணைக்கும் ஒரு பிரத்யேக எலும்பு மற்றும் தசை பகுதியில் ஏற்படும் பாதிப்பை தான் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய் பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.
கால் மூட்டு பகுதிக்கு கீழ் வலியாக இதன் அறிகுறி வெளிப்படும். சிலருக்கு வலி அதிகமாகி வீக்கமும், எரிச்சலும் ஏற்படக்கூடும்.
இதற்கு வைத்தியர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மூலம் பாதிப்பினை அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்குவர். இத்தகைய பாதிப்பிற்கு பிரத்யேக உறையை அணிந்து கொள்ளவும் வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
மேலும் இத்தகைய பாதிப்புள்ள விளையாட்டு வீரர்கள் தங்களுடைய காலணியை பிரத்யேகமாக வடிவமைக்க வேண்டும் எனவும் குறிப்பிடுவார்கள்.
சிலருக்கு மிக அரிதாக இயன்முறை மருத்துவ சிகிச்சையும் அவசியமாகும். பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு பதினைந்து வயதிற்குள் ஏற்படும். அதன் பிறகு இத்தகைய பாதிப்பு தானாகவே சரியாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
வைத்தியர் ஸ்ரீராம்
தொகுப்பு அனுஷா.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM