சாய் பாபா வழிபாடு - சில சூட்சுமங்கள்

Published By: Digital Desk 2

10 Sep, 2026 | 02:24 PM
image

இன்றைய திகதியில் பலரும் விவரிக்க இயலாத அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத பல்வேறு பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொள்கிறார்கள். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொண்டாலும் எம்மில் பலரும் சாய்பாபாவை வழிபட தவறுவதில்லை.

இந்நிலையில் சாய்பாபா வழிபாட்டில் உள்ள சில சூட்சமமான விடயங்களையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் யோக நிலையில் இருந்தால், அதாவது கேது பகவான் அவர்களுக்கு சாதகமான நிலையில் இருந்தால், அவர்கள் ஆலயத்தில் உள்ள இறைவழிபாட்டை மேற்கொள்வதை விட, அற்புதங்களை நிகழ்த்தும் சாதுக்களான ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சத்ய சாய்பாபா ஆகியோர்களை வழிபட தொடங்குவர். இவர்களது மனமும் சாய்பாபா வழிபாட்டில் தான் நிறைவடையும்.

சாய்பாபா வழிபாட்டை நாளாந்தம் மேற்கொண்டாலும் வியாழக்கிழமைகளில் பிரத்யேகமாக மேற்கொள்வதுண்டு.

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள், உளவியல் சார்ந்த பிரச்சனைகள், உறவு சார்ந்த சிக்கல்கள், நிதி சார்ந்த குளறுபடிகள், உயர்கல்வி தொடர்பான கோரிக்கை என ஒவ்வொருவரும் தங்களுடைய பிரச்சனைகளை சாய்பாபாவின் முன் சமர்ப்பிப்பதுண்டு. அவர்களுக்கு சாய்பாபாவின் அருளும் கிடைப்பதுண்டு.

இருப்பினும் சாய்பாபாவிடம் எப்பொழுது உங்களது குறைகளை கூறலாம் என்றால், எப்போதெல்லாம் பத்தரை கரணம் எனும் கரணம் இயங்குகிறதோ அந்த நேரத்தில் நீங்கள் சாய்பாபாவிடம் ஒரு கோரிக்கையை சமர்ப்பித்தால், அவை விரைவில் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.

ஏனெனில் பத்தரை கரணம் என்பது சாதுக்களுக்கும், கேது பகவானுக்கும் உரிய கரணமாகும். இனி வியாழக்கிழமைகளை விட பத்தரை கரணம் எப்போதெல்லாம் வருகிறதோ.. அந்தத் தருணத்தில் சாய்பாபா வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டால், உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேறி, வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46