இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் தடுமாறுகிறது பாகிஸ்தான்

10 Sep, 2026 | 01:58 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியிலும் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றம் தொடர்க்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களை  எட்டத்    தவறிய பாகிஸ்தான், தற்போது பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கடைசிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை எட்டத் தவறியது.

முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்விகளை சந்தித்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்ததால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பாரிய மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தது. ஆனால் அந்த மாற்றம் பலன் தராது என்ற நிலையே காணப்படுகிறது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் காஸி கோறி, ரஸாஉல்லா, மொஹமத் இம்ரான் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

புதன்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 33.5 ஓவர்கள் மாத்திரமே துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் சவூத் ஷக்கீல் (43), ரஸாஉல்லா (11), மொஹமத் அபாஸ் (21) ஆகிய மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் டங் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஒல்லி ரொபின்சன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதலாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்தின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

பென் டக்கெட் (11), ஜொர்டான் கொக்ஸ் (4), அணித் தலைவர் ஜோ ரூட் (8) ஆகிய மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (39 - 3 விக்.)

இந் நிலையில் எமிலோ கே, ஹெரி புறூக் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

எமிலோ கே 60 ஓட்டங்களையும் ஹெரி புறூக் ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில்  ரஸாஉல்லா   42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28