சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிப்பு விபத்து : 14 பேர் உயிரிழப்பு ; 11 பேர் காயம்!

10 Sep, 2026 | 01:03 PM
image

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மடா நகருக்கு அருகே, போர் எச்சங்கள் மற்றும் ஆயுதங்களை தற்காலிகமாகச் சேமித்து வைத்திருந்த கிடங்கில் புதன்கிழமை (09) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை சிரிய அரசத் தொலைக்காட்சியால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தற்காலிக சேமிப்புக் கிடங்கில் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளின் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்களில் சிரிய பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்களும் அடங்குவர் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புப் படைகள் விரைந்தபோதிலும், அடர்ந்த புகையுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இடம்பெற்ற சிறு சிறு வெடிப்புகள் காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் பல மணிநேரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட வெடிப்புக்கான முதன்மை காரணம் என்ன என்பது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னதாக, கடந்த முதலாம் திகதி இத்லிப் மாகாணத்தின் பின்னிஷ் பகுதியில் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதில் 05 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலப் போரின் எச்சங்கள் மற்றும் பாதுகாப்பற்ற வெடிபொருள் சேமிப்புகள் இப்பகுதியில் பொதுமக்களின் உயிருக்குத் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும்...

2026-10-12 16:30:01
news-image

‘தீவாளி’ என்பதற்குப் பதிலாக ‘தீபாவளி’ எனப்...

2026-10-12 16:52:41
news-image

பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல்:...

2026-10-12 13:36:59
news-image

ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ட்ரம்ப்...

2026-10-12 12:17:06
news-image

2100க்குள் மனித குலமே முற்றாக அழிந்துவிடும்?!...

2026-10-12 12:03:34
news-image

ஹோர்முஸ், ஓமன் கடற்பரப்புகளில் 2 கப்பல்கள்...

2026-10-12 11:19:36
news-image

பாப்பரசர் லியோவுக்கு நுரையீரலில் பாதிப்பு ;...

2026-10-12 10:43:00
news-image

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவுடன்...

2026-10-12 10:41:10
news-image

சவூதி அரேபியாவில் ரியாத் விமானநிலையத்தில் மீண்டும்...

2026-10-12 09:23:36
news-image

ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு...

2026-10-11 20:57:59
news-image

இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார்...

2026-10-11 17:07:35
news-image

நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர்...

2026-10-11 15:53:34