பகல் முழு­வதும் விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த பதி­னொரு வயது நிரம்­பிய சிறுவன் இரவு வேளை திடீ­ரென மூர்ச்­சை­யற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது சிகிச்சை பய­னின்றி மர­ண­மா­கி­யுள்ளார். 

இச்­சம்­பவம் கிளி­நொச்சி முழங்­காவில் வைத்­தி­ய­சாலை வீதி இரா­ச­பு­ரத்தில் கடந்த 16 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இரவு இடம்­பெற்­றது.

மர­ண­மா­னவர் கிட்­டி­ன­சாமி கோவ­ரசன் (வயது 11) என்னும் முழங்­காவில் மகா வித்­தி­யா­ல­யத்தில் ஆண்டு 6இல் கல்வி பயிலும் மாண­வ­ராவார்.

சம்­பவ தினம் ஞாயிறு விடு­முறை தின­மா­னதால் வீட்டின் முன்­பாக உள்ள காணியில் தனது நண்­பர்­க­ளான சிறு­வர்­க­ளுடன் விளை­யா­டி­யவர் இரவு படுக்­கைக்குச் சென்­றவர் திடீ­ரென நெஞ்சு வலிப்­ப­தா­கவும் கூறி வாந்தி எடுத்­த­நி­லையில் மயக்­க­ம­டைய முழங்­-காவில் ஆதார வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டு சிகிச்­சைக்­காக கிளி­நொச்சி மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லையில் சேர்க்-­கப்­பட்ட நிலையில்  சிகிச்­சைக்கு முன்பே மர­ண­மா­கி­யுள்­ள­தாக முழங்­காவில் பொலி-ஸார் தெரிவித்தனர். 

இச்சிறுவனின் மரணம் தொடர்பில் மேல-திக விசாரணைகள் இடம்பெற்று வரு-கின்றமை குறிப்பிடத்தக்கது.