உலகின் அதிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட் பதிவு – விஞ்ஞானிகள் தகவல்

Published By: P. Saranya

10 Sep, 2026 | 12:27 PM
image

கடந்த ஆகஸ்ட் மாதம், உலகின் சராசரி புவி வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உயர்ந்து, மனித வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற மையம் இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் சராசரி புவி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 16.96°C ஆகப் பதிவாகியுள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.65°C அதிகமாகும்.

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளுக்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தோனேசியா முதல் கிரீஸ் மற்றும் பெல்ஜியம் வரை வரலாறு காணாத காட்டுத்தீ பரவியதுடன், ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் கடுமையான வறட்சி நிலவியது.

வெப்ப அலையின் காரணமாக வீதிகள் உருகியதுடன், தொடருந்து தண்டவாளங்கள் வளைந்து, பாடசாலைகள் மூடப்பட்டு, வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் உலகின் நீண்டகால சராசரி வெப்பநிலை உயர்வை 1.5°C க்குள் கட்டுப்படுத்த 200 நாடுகள் உறுதியேற்றிருந்தன. ஆனால், நவம்பர் 2025 க்கு பிறகு உலக சராசரி வெப்பநிலை 1.5°C ஐத் தாண்டுவது இதுவே முதன்முறையாகும்.

பசுபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் காரணமாகக் கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதனை அளவை எட்டியுள்ளது. இது வரும் மாதங்களில் புவி வெப்பநிலையை மேலும் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கார்பன் உமிழ்வைக் குறைக்காவிட்டால், காலநிலை மாற்றம் அன்றாட வாழ்க்கையை மேலும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும்...

2026-10-12 16:30:01
news-image

‘தீவாளி’ என்பதற்குப் பதிலாக ‘தீபாவளி’ எனப்...

2026-10-12 16:52:41
news-image

பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல்:...

2026-10-12 13:36:59
news-image

ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ட்ரம்ப்...

2026-10-12 12:17:06
news-image

2100க்குள் மனித குலமே முற்றாக அழிந்துவிடும்?!...

2026-10-12 12:03:34
news-image

ஹோர்முஸ், ஓமன் கடற்பரப்புகளில் 2 கப்பல்கள்...

2026-10-12 11:19:36
news-image

பாப்பரசர் லியோவுக்கு நுரையீரலில் பாதிப்பு ;...

2026-10-12 10:43:00
news-image

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவுடன்...

2026-10-12 10:41:10
news-image

சவூதி அரேபியாவில் ரியாத் விமானநிலையத்தில் மீண்டும்...

2026-10-12 09:23:36
news-image

ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு...

2026-10-11 20:57:59
news-image

இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார்...

2026-10-11 17:07:35
news-image

நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர்...

2026-10-11 15:53:34