ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை ஆபத்துக்குள்ளாக்கும் அமெரிக்க ஜனாதிபதி

Published By: Priyatharshan

18 Oct, 2017 | 12:18 PM
image

ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு மறுத்­தி­ருப்­பதன் மூல­மாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இரு­வ­ருட கால­மாக நடை­மு­றையில் இருந்­து­ வரும் அந்த உடன்­ப­டிக்­கையை ஆபத்­துக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கிறார்.

ஈரான் மீதான உலக நாடு­களின் தடைகள் நீக்­கப்­ப­டு­வ­தற்கு பிர­தி­யு­ப­கா­ர­மாக அந்­நாடு அதன் அணு­சக்தி திட்­டங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குக்கும் உடன்­ப­டிக்­கையில் 2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா உட்­பட 6 வல்­ல­ரசு நாடுகள் கைச்­சாத்­திட்­டன.

அமெ­ரிக்க சட்­டத்தின் பிர­காரம் அமெ­ரிக்க நிர்­வாகம் உடன்­ப­டிக்­கையின் நிபந்­த­னை­க­ளுக்கு இசை­வான முறையில் ஈரான் நடந்­து­கொள்­கி­றதா? இல்­லையா ?என்­பதை 90 நாட்­க­ளுக்கு இரு தடவை எழுத்து மூலம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்ட ஏனைய நாடு­களும் ஐக்­கிய நாடுகள் சபையும் ஈரான் உடன்­ப­டிக்­கையை முழு­மை­யாகக் கடைப்­பி­டிக்­கி­றது என்று உறு­தி­படக் கூறு­கின்­ற­போ­திலும் டொனால்ட் ட்ரம்ப் அதை உறு­திப்­ப­டுத்த மறுத்­தி­ருக்­கிறார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற பிறகு ஏற்­க­னவே இரு தட­வைகள் ட்ரம்ப் உடன்­ப­டிக்­கையை ஈரான் முறை­யாகக் கடைப்­பி­டிக்­கி­ற­தென்று உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வருடம் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை கிழித்­தெ­றியப் போவ­தாக அச்­சு­றுத்­திய ட்ரம்ப் அதை அமெ­ரிக்க--- வர­லாற்றில் படு­மோ­ச­மான உடன்­ப­டிக்கை என்று தொடர்ந்து வர்­ணித்து வந்தார். இப்­போது மூன்­றா­வது தட­வை­யாக உடன்­ப­டிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு சில நாட்கள்  முன்­ன­தாக அவ்­வாறு செய்­வ­தற்கு அவர் மறுத்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

ட்ரம்ப் நிரு­வாகம் அதன் ஆரம்ப நாட்­களில் இருந்தே ஈரான் தொடர்பில் ஒரு கடு­மை­யான போக்­கையே எடுத்­தி­ருந்­தது. ஈரானின் ஏவு­கணைத் திட்­டங்கள் தொடர்பில் புதிய தடை­களை  விதித்த நிரு­வாகம் தெற்காசியாவில் ஈரானின் போட்டி நாடு­க­ளுடன் கைகோர்த்துச் செயற்­ப­டவும் ஆரம்­பித்­தது. உடன்­ப­டிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ட்ரம்ப் மறுத்­தி­ருக்­கின்ற போதிலும் அதி­லி­ருந்து அவர் வில­கி­வி­ட­வில்லை. பதி­லாக, அடுத்த தீர்­மா­னத்தை எடுக்கும் பொறுப்பை காங்­கி­ர­ஸிடம் கடத்­தி­விட்டார். ஈரா­னுக்கு எதி­ராக தடை­களை மீண்டும் விதிக்க வேண்­டுமா இல்­லையா என்ற தீர்­மா­னத்தை குடி­ய­ர­சுக்­கட்­சியின் கட்­டுப்­பாட்டில் உள்ள காங்­கிரஸ் இன்னும் 60 நாட்­களில் எடுக்க வேண்டும். எந்­த­வொரு விரி­வான சட்­ட­மூ­லத்­தையும் கொண்­டு­வந்து நிறை­வேற்­று­வ­தற்கு அமெ­ரிக்க காங்­கி­ரஸின் செனட் சபையில்  (ஜன­நா­யக கட்­சி­யி­ன­ரையும் உள்­ள­டக்­கி­ய­தாக) இரு­த­ரப்பு கருத்­தொ­ரு­மிப்பு அவ­சியம் என்­பதால் ஈரா­னுக்கு எதி­ராக தடை­களை மீண்டும் விதிப்­ப­தற்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் அண்­மைக்­கா­லத்தில் எடுக்­கப்­படக் கூடிய சாத்­தி­ய­மில்லை என்றே அர­சியல் அவ­தா­னிகள் கரு­து­கி­றார்கள்.

எது எவ்­வா­றி­ருந்­தாலும், உடன்­ப­டிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு மறுத்த தனது செயலின் மூல­மாக அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரத்­துக்கு ட்ரம்ப் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் சேதம் பாரி­ய­தாகும்.

உடன்­ப­டிக்­கையைப் பற்றி யதார்த்த பூர்­வ­மான ஒரு மதிப்­பீட்டைச் செய்­வ­தி­லி­ருந்து அவர் அர­சியல் மதிப்­பீ­டு­களின்  அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மா­னங்­களை எடுக்­கிறார் என்றே தோன்­று­கி­றது. 

பராக் ஒபா­மாவின் பத­விக்­கா­லத்தின் பிற்­ப­கு­தியில்  ஈரா­னு­ட­னான அமெ­ரிக்க உற­வுகள் மீளச்­சீ­ர­மைக்­கப்­பட்­டது என்­பதில் சந்­தே­க­மில்லை. அந்த மீள்­சீ­ர­மைப்­புக்கு ஒரு முடிவைக் கட்­டக்­கூ­டி­ய­தாக ட்ரம்பின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன என்று சர்­வ­தேச அர­சியல் அவ­தா­னிகள் கூறு­கி­றார்கள்.

இப்­போது ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்­கைக்கு மேலாக தடை­வி­திப்பு அச்­சு­றுத்தல் தொங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. அது ஈரானில் நடை­பெற்ற அண்­மைய தேர்­தல்­களில் அர­சியல் பின்­ன­டைவைச் சந்­தித்த கடும் போக்­கா­ளர்­க­ளுக்கு ஒரு வாய்ப்­பாக அமையக் கூடும். 

ஈரான் ஜனா­தி­பதி ஹசன் ரோஹா­னியன் நிகழ்ச்­சித்­திட்­டத்தின் பின்னால் அணி திரண்டு நிற்கும் சீர்­தி­ருத்­த­வா­திகள் மற்றும் மித­வா­தி­களே அணு­சக்தி உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­டு­வதைச் சாத்­தி­ய­மாக்­கி­ய­வர்கள். 

அணு­சக்தி நெருக்­க­டிக்கு தீர்­வொன்றைக் காண்­ப­தாக உறு­தி­ய­ளித்த ஜனா­தி­பதி ரோஹானி உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்­ட­துடன் இவ்­வ­ருடம் நடை­பெற்ற தேர்­த­லிலும் வென்று மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகக் கூடி­ய­தாக இருந்­தது. இப்­போது, அமெ­ரிக்கா ட்ரம்ப் நிரு­வா­கத்தின் கீழ் எடுக்­கின்ற பகை­மை­யு­ணர்­வு­ட­னான நிலைப்­பா­டுகள் கார­ண­மாக உடன்­ப­டிக்­கைக்கு ஆத­ர­வாக ஈரா­னி­யர்­களின் அபிப்­பி­ரா­யத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது ரொஹா­னிக்கு பெரும் கஷ்­ட­மாக இருக்­கப்­போ­கி­றது. 

ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்கை குறை­பா­டு­களைக் கொண்டதாக இருந்தாலும் உலக வல்லரசுகள் ஒன்றிணைந்து சிக்கலான பிரச்சினைகளுக்கு  இராஜதந்திர தீர்வினைக் காண முடியும் என்பதற்கு இது பிரகாசமான உதாரணமாக இருக்கிறது. ஏனைய அணுவாயுத நெருக்கடிகளுக்கு தீர்வு  காண்பதற்கு ஒரு வகை மாதிரியானதாகவும் நோக்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஈரானுக்கு எதிரான நிலைப்பாடுகளை (அதுவும் அந்த நாடு உடன்படிக்கையின் நிபந்தனைகளை கடைப்பிடித்து செயற்படுகின்ற சூழ்நிலையில்) எடுப்பதன் மூலமாக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு அபகீர்த்தியை ஏற்படு த்துகிறார் என்பதே அவதானிகள் மத்தியிலான பொது அபிப்பிராயமாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25