அவுஸ்­தி­ரே­லிய சிட்னி நகரைச் சேர்ந்த 47  ஆண்­க­ளையும்  பெண்­க­ளையும் உள்­ள­ டக்­கிய குழு­வினர்  முழு­மை­யான நிர்­வா ணக் கோலத்தில் குழிப்­பந்­தாட்ட (கோல்ப்)  விளை­யாட்டை விளை­யாடி புதிய உலக சாதனை படைத்­துள்­ளனர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த சாதனை தொடர்­பான தக­வல்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய இளம் நிர்­வா­ணிகள் அமைப்பின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இந்த  சாதனை நிகழ்வில் 18  வய­துக்கும் 40  வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டை­ய­வர்கள் பங்­கேற்­றனர். அத்­துடன்  இந்த விளை­யாட்டில் பங்­கேற்­ற­வர்­களில் 70  சத­வீ­த­மா­ன­வர்கள் ஆண்­க­ளாவர்.  30  சத­வீ­த­மா­ன­வர்கள் பெண்­க­ளாவர்.

அவர்கள் இதற்கு முன்னர்  30  பேரால் நிர்­வாணக் கோலத்தில் குழிப்­பந்­தாட்ட விளை­யாட்டு விளை­யாடி மேற்­கொள்­ளப்­பட்ட சாத­னையை முறி­ய­டித்­துள்­ளனர்.

உடலின் பிர­திமை தொடர்­பான பிரச்­சி­னை­களால்  துன்­பப்­பட்டு வரும்  பல­ருக்கு இந்த நிர்­வாண குழிப்­பந்­தாட்டம் அந்தப் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து மீள உதவும் என   இந்­நி­கழ்வின் ஏற்­பாட்­டா­ள­ரான மற் (32  வயது)  கூறினார்.

 இந்­நி­லையில் இந்தக் குழுவினர் தமது சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்யும் முயற்சி யில் தற்போது  ஈடுபட்டுள்ளனர்.