iPhone 18 Pro, iPhone 18 Pro Max அறிமுகம் – கமரா, AI மற்றும் பற்றரியில் முக்கிய மேம்பாடுகள்

10 Sep, 2026 | 11:16 AM
image

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Pro மொடல்கள் மேம்பட்ட கமரா அமைப்பு, அதிக செயல்திறன், நீண்ட பற்றரி ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை A20 Pro chip மற்றும் iOS 27 இயங்குதளத்துடன் வருகின்றன.

iPhone 18 Pro மற்றும் Pro Max ஆகியவற்றில் புதிய 48MP Fusion Main camera அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் variable aperture வசதி வழங்கப்பட்டுள்ளதால், வெளிச்ச நிலைமை மற்றும் புகைப்படத் தேவைக்கு ஏற்ப கேமராவின் aperture-ஐ மாற்றிக்கொள்ள முடியும். மேம்படுத்தப்பட்ட குறைந்த வெளிச்ச புகைப்படம் மற்றும் வீடியோ திறன்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், Apple Reference Image வசதி மூலம் புகைப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் புதிய தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக புகைப்பட ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்முறை உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6-பிளேடு அமைப்பைக் கொண்ட இந்த கேமரா, வெளிச்சம் மற்றும் ஆழத்திற்கு ஏற்ப துளையின் அளவை தானாகவே மாற்றியமைத்துக் கொள்ளும். பயனர்கள் இதனை மெனுவலாகவும்   கட்டுப்படுத்த முடியும்.

இரு மொடல்களிலும் சிறிய அளவிலான Dynamic Island, A20 Pro chip மற்றும் அடுத்த தலைமுறை vapor chamber தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் நீண்ட நேரம் அதிக செயல்திறனை வழங்கும் வகையில் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் Dynamic Island அளவு சிறியதாக மாற்றியமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் மூன்று 'லைவ் ஆக்டிவிட்டிகளை' காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் iOS 27 இயங்குதளத்தில் செயல்படுவதோடு, புதிய Siri AI தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கின்றன.

பட்டரி செயல்திறனிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. eSIM-only மொடல்களில் iPhone 18 Pro 36 மணி நேரம் வரையிலும், iPhone 18 Pro Max 45 மணி நேரம் வரையிலும் வீடியோவை இயக்கக்கூடியதாக Apple தெரிவித்துள்ளது. iPhone 18 Pro சுமார் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை வயர்டு சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

இந்த புதிய iPhone மொடல்கள் கருப்பு, வெள்ளி, Glacier மற்றும் புதிய Burgundy ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கின்றன. 256GB, 512GB, 1TB மற்றும் 2TB சேமிப்பகத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் iPhone 18 Pro-வின் ஆரம்ப விலை 1,199 அமெரிக்க டொலர்கள் எனவும், iPhone 18 Pro Max-ன் ஆரம்ப விலை 1,299 அமெரிக்க டொலர்கள் எனவும் Apple அறிவித்துள்ளது.

65-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 12 முதல் முன்பதிவு ஆரம்பமாகி, செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் 20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 25 முதல் இந்த சாதனங்கள் கிடைக்கவுள்ளன.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விலை மற்றும் விற்பனைத் திகதி தொடர்பில் Apple நிறுவனம் இதுவரை தனியான அறிவிப்பை வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்