ஒவன் உப­க­ர­ணத்தில்   தனது  இரு சிறிய மகன்­க­ளையும்  உயி­ருடன் வைத்து  சமைத்துக் கொன்ற குற்­றச்­சாட்டில் தாயொ­ருவர் கைது­செய்­யப்­பட்ட  அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்   அமெ­ரிக்க ஜோர்­ஜிய மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்­த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­க­ளை வெளியிட்­டுள்­ளன.

அட்­லாண்டா  பிராந்­தி­யத்தில்  வாழ்க்கைத் துணை­வ­ரி­ட­மி­ருந்து பிரிந்து தனித்து வசித்த வந்த லமோரா வில்­லியம்ஸ் (24  வயது)  என்ற மேற்­படி  தாய், தனது மகன்­மா­ரான  கென்யன்ட் பென் (2 வயது) மற்றும் ஜகார்டர் பென் (ஒரு வயது) ஆகி­யோரை  உண­வு­களை  வாட்டும் ஒவன்  உப­க­ர­ணத்தில் வைத்து அடைத்த பின்னர் அதனை இயக்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் அந்தக் குழந்­தைகள் ஒவன் உப­க­ர­ணத்­திற்குள் துடி­து­டித்து பரி­தா­ப­க­ர­மாக  உடல் கருகி உயி­ரி­ழந்­துள்­ளனர். தனது  குழந்­தை­களை பரா­ம­ரிக்க  பரா­ம­ரிப்­பாளர் ஒரு­வரை தேடிக் கண்­டு­பி­டித்து பணிக்கு அமர்த்த முடி­யா­ததால் அண்­மையில் தனது  தொழி­லி­ருந்து லமோரா வில­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் தனது குழந்­தை­களால் தான் போது­மான அளவு துன்­பத்தை அனு­ப­வித்து விட்­ட­தாக அவர் தனது நண்­பி­க­ளிடம்  தெரி­வித்­துள்ளார்.

லமோ­ராவின் தந்தை அவர் 19  வயது யுவ­தி­யாக இருக்கும் போது திடீ­ரென இறந்­த­தை­ய­டுத்து அவர் மன­நோயால் பாதிக்­கப்­பட்­ட­தா­கவும் அதன் பின்  தனது  4  குழந்­தை­க­ளையும்  தனித்து பரா­ம­ரிக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து  அவ­ரது நிலைமை மேலும் மோச­ம­டைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனது இரு குழந்­தை­க­ளையும்  ஒவன் உப­க­ர­ணத்தில் வைத்து கொன்ற பின்னர் லமோரா,  அந்தக் குழந்­தை­களின் தந்­தை­யான ஜமீல் பென்­னுடன்  கைய­டக்கத் தொலை­பேசி காணொளி  தொடர்­பாடல் மூலம்  தொடர்புகொண்டு உரை­யா­டி­யுள் ளார். இதன்போது  அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி காணொளிக் காட்­சியில் தரையில் இரு குழந்­தை­களும்  தோலின் நிறம் ஆங்­காங்கே கரு­மை­ய­டைந்த நிலை யில்  மரக்­கட்­டைகள் போன்று கிடப்­பதை அவ­தா­னித்த ஜமீல்,  ஏதோ விப­ரீ தம் இடம்­பெற்­றுள்­ளதை உணர்ந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார். தொடர்ந்து  சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் இரு குழந்­தை­களும்  கொடூ­ர­மான முறையில் கொல்­லப்­பட்டு கிடப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள் ­ளனர்.

சம்­பவ தினம் அந்த வீட்டில் லமோ­ராவின் 4  பிள்­ளை­களில் ஒரு­வ­ரான  3  வயது மகனும் இருந்துள்ளான். ஆனால் அவன் எதுவிதமான பாதிப்புமின்றி உயிர்தப்பியுள்ளான்.

மேற்படி வீட்டில் வசித்த லமோராவின் மூத்த மகளான 6  வயது சிறுமி சம்பவம் நடந்த போது அங்கு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.