மனை­விக்கு ஆசை நாயகன் இருப்­பதை அறிந்த கணவன் ஆத்­திரம் மேலீட்­டினால் தனது மனை­வியை வாளால் வெட்­டிய சம்­பவம், பதுளை புற­ந­கர்ப்­ப­கு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. 

படு­கா­ய­ம­டைந்த பெண்ஆபத்­தான நிலையில் பதுளை அர­சினர் மருத்­து­வ­மனையில் தீவிர சிகிச்­சைப்­பி­ரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு, சிகிச்சை பெற்று வரு­கின்றார். 

இச்­சம்­பவம் குறித்து, பதுளைப் பொலி­ஸாருக்கு தகவல் கிடைக்­கவே, அவர்கள் விரைந்து, படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கிய பெண்ணை, மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­த­தோடு, அவ­ரது கண­வரைக் கைது செய்­துள்­ளனர். அத்­துடன் பெண்ணை வெட்­டு­வ­தற்கு பயன்படுத்தப்பட்ட வாளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.