(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான ரி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது கால் இறுதிப் போட்டியில் ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கழகத்தை 64 ஓட்டங்களால் வெற்றிகொண்ட கலம்போ கிரிக்கெட் க்ளப் (சிசிசி) அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

எஸ்எஸ்சி மைதானத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற இந்தப் போட்டியில் டில்ஷான் மதுஷ்க குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதம், துல்னித் சிகேரா பெற்ற அரைச் சதம், அஷேன் டெனியலின் துல்லியமான பந்தவீச்சு என்பன சிசிசியின் வெற்றியை இலகுபடுத்தின.

டில்ஷான் மதுஷ்க 56 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 114 ஓட்டங்களை விளாசினார்.
அவரும் துல்னித் சிகேராவும் 2ஆவது விக்கெட்டில் 76 பந்துகளில் 151 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
எண்ணிக்கை சுருக்கம்
சிசிசி 20 ஓவர்களில் 218 - 4 விக். (நிஷான் மதுஷ்க 114 ஆ.இ., துல்னித் சிகேரா 52, அஷேன் பண்டார 26, ட்ரவீன் மெத்யூ 37 - 2 விக்.)
ஏஸ் கெப்பிட்டல் சிசி 20 ஓவர்களில் 154 - 8 விக். (பவன் பத்திராஜ 51, சாமிக்க ஹீனட்டிகல 23, ரச்சின்த டி சில்வா 17, அஷேன் டெனியில் 23 - 3 விக்., இனுக்க கரன்னாகொட 27 - 2 விக்., துவிந்து ரணதுங்க 31 - 2 விக்.)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM