இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார் 

Published By: Vishnu

09 Sep, 2026 | 10:49 PM
image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி வைஸ் அட்மிரல் Ajay Kochhar (Vice Chief of the Naval Staff of the Indian Navy) புதன்கிழமை (2026 செப்டம்பர் 09) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார். 

அதற்கமைய, இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி, கடற்படையின் பாரம்பரிய சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு கடற்படைத் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதியினால் பிரதான அதிகாரி உள்ளிட்ட கடற்படை நிர்வாகக் குழுவினர் இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானிக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில், இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானிக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையே மூலோபாய மட்டத்திலான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருதரப்பிற்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47