(நா.தனுஜா)
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை அவசியம் என்பது உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழினப் படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன. இந்தச் சான்றுப்பொருட்கள் இக்குற்றத்தை இழைத்த தரப்பான இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதானது, அவற்றை சேதப்படுத்திக் குற்றங்களை நிரூபிக்க இயலாத சூழலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
எனவே குற்றமிழைத்த தரப்பான இலங்கை அரசின் தலையீடுகள் எவையும் அற்ற வகையில் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட சகல மனிதப் புதைகுழிகளினதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அதற்கென சர்வதேச தடயவியல் நிபுணர்களைப் பணியில் ஈடுபடுத்தல் மற்றும் அகழ்ந்தெடுக்கப்படும் சான்றுப்பொருட்களை உரியவாறு பாதுகாத்தல் என்பன உள்ளிட்ட அனைத்துச் செயன்முறைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின்கீழ் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
மிக உடனடியாக நிறைவேற்றப்படவேண்டிய இவ்விடயம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மு.ப 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இப்பேரணி கோவில் வீதி ஊடாகச் சென்று முத்திரைச் சந்தியில் உள்ள கிட்டு பூங்காவை சென்றடைந்து, அங்கு பொதுக்கூட்டமொன்று நடைபெறும்.
இப்பேரணியின் ஊடாக செம்மணி உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை அவசியம், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான சர்வதேச குற்றவியல் விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் நீதி உறுதிப்படுத்தப்படவேண்டும், நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், தமிழ் மக்களின் நில உரிமை பாதுகாக்கப்படவேண்டும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் அரசினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் மத உரிமைகளைப் பாதுகாத்தல், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் ஆகிய விடயங்கள் வலியுறுத்தப்படவுள்ளன என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM