(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் என்பன நடைமுறையில் உள்ள போதிலும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அர்ப்பணிப்பு இல்லாமையை வன்மையாகக் கண்டிப்பதாக கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் செவ்வாய்க்கிழமை (8) அமர்வின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தொடர்பில் கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது இலங்கையில் இழைக்கப்பட்ட மிக மோசமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது.
அதுமாத்திரமன்றி அவ்வறிக்கையில் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கண்காணிக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மீதான தொடர் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மீறல்கள் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் என்பன நடைமுறையில் உள்ள போதிலும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடன்கூடிய அர்ப்பணிப்பு இல்லாமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிமன்றங்களில் சாத்தியமான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாப்பதை எளிதாக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM