கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன் தாமதம்? - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி!

09 Sep, 2026 | 05:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் இனத்தை அழித்து, செம்மணி மனித புதைகுழிகளை உருவாக்கி, தாய், தந்தையரை  நிர்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது துரத்துகிறது. கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மீதான எமது மக்களின் நம்பிக்கை சிதைவடைந்து செல்கிறது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09) நடைபெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின்  தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பான  தனது அறிக்கையில்  காணாமல் போனவர்கள், எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள்  சபையும்  இலங்கை அரசாங்கத்திற்கு உரிய செயற்பாடுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் உள்ளக விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதியான வகையில் சர்வதேச விசாரணையை கோருகிறோம்.

தமிழ் அரசியல்  கைதிகள் சுமார் 25  ஆண்டுகாலாக சிறையில் உள்ளார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக போராளிகளின் படங்களை வைத்திருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்றும் சிறையில் வாடுகின்றனர். எங்களுடைய தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று மஹிந்த  ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் அவர்கள் கடந்த காலங்களில் எங்களுடைய இனத்தை அழிப்பதற்கான   நடவடிக்கையில் வெற்றிவாகை சூடியவர்களாக இருந்தாலும் அந்த தாய், தந்தையின் உணர்வு எப்படி இருக்கும் என்பது தற்போது இவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். ஊழல் தொடர்பாக கைது செய்யப்படுகின்றவர்கள்,மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் யார், எவரென்று பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் இருக்கின்றனர். அவர்களை ஏன் கைது செய்யாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள்? எமது இனத்தை இல்லாதொழிக்க நினைத்த, மனித உரிமைகளை மீறியுள்ளவர்களாக கருதப்படுகின்றனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்ஷர்கள்  இல்லதொழித்துள்ளதாக    உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சந்தேக நபரான கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன் தாமதமாகின்றது என்று தெரியவில்லை?மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம். இந்த விசாரணைகளை சர்வதேச அனுசரணையுடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை கர்மா என்பதனை நான் நம்புவதில்லை. ஆனால் கர்மா என்பது இருக்கின்றது என்பதனை உணரக்கூடியதாக உள்ளது. எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள் எமது மக்களின் அவலக் குரல், செம்மணியில் மக்களை புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள்,முள்ளிவாய்க்காலில் தாய்,தந்தை கண் முன்னே சூடுபட்டு விழுகின்ற போது, அந்த மக்களின் அழுகுரல் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்படத் தொடங்கியுள்ளது. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது எமது ஆதரவு இருக்கும் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.

ஐ.நா. சபை தமது கருத்துக்களை அழுத்தமாக கூறினாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை ஐ.நா. சபை இறுக்கமாக கொள்ளவில்லை. ஐக்கிய  நாடுகள் சபை   மீது எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது இழந்து கொண்டு வருகின்றது.

வெறும் வார்த்தைகயை அறிக்கைகளை விடாமல் அதனை நடைமுறைப்படுத்தும் சகல விடயங்களையும் அது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுடன், இந்த அரசாங்கம் உள்ளக விசாரணையை நிறுத்தி சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் அடிப்படையை உருவாக்க வேண்டும். இதன்மூலமே முன்னெடுக்கும் நடவடிக்கையில் நீதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 16:16:14
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13