பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15 ஆண்டுகளில் ரூ.8,777 மில்லியன் செலவு

09 Sep, 2026 | 05:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதுகாப்புப் படைகளின் பிரதானி  பதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலகத்தைப் பராமரிப்பதற்காக 2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கம் 8,777 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை(09)  இடம்பெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சட்டத்தை இரத்துச் செய்வதால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளின் ஊடாக நாட்டில் ஏற்பட்ட மற்றும் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெற்றிகரமாகக் கையாள முடியும் என்பதை அதிகாரிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர்.

அறுகம்பே பகுதியில் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை உதாரணமாகக் குறிப்பிட முடியும். அதன்போது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, சந்தேகநபர்களைக் கைது செய்ததன் மூலம் அதிகாரிகள் நிலைமையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். 

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவி இல்லாமலேயே நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உரிய முறையில் கையாளவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும்.

2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதானி சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம், இராணுவ நடவடிக்கைகளை மிகவும் திறமையானதும், பயனுள்ள மற்றும் நவீனமான முறையில் முன்னெடுப்பதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய நிதி நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவி அவசியமற்றதாக மாறியுள்ளது.

2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் குறித்த பதவிக்கும் அலுவலகத்தைப் பராமரிப்பதற்கும் 8,777 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் அதிகபட்ச செலவு 2014ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. 

2025ஆம் ஆண்டில் குறைந்தபட்சமாக 26 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளுக்குள் தேரர்கள் அணியும் ஆடை தொடர்பில்...

2026-10-16 17:24:04
news-image

பாராளுமன்றம் ஒக். 20 முதல் 23...

2026-10-16 18:00:30
news-image

யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த...

2026-10-16 17:45:46
news-image

சுங்கத் திணைக்கள தலைமையகத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-10-16 17:22:16
news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27