பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் - ஜீவன் தொண்டமான்!

09 Sep, 2026 | 05:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்டத் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை காலத்தை நீட்டிப்பதற்கு தோட்ட கம்பனிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. உண்மையில் இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு.சம்பள அதிகரிப்புக்காக அரசாங்கம் தோட்டக் கம்பனிகளிடம் விலை போயுள்ளது. குத்தகை காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என  இலங்கை  தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09) நடைபெற்ற  பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின்  தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் 4500 மில்லியன்  ரூபா நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன். ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் கபரகல தோட்டத்தில் 50 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இனி தான் மலையக மக்களுக்கு மறுமலர்ச்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதுவரை காலமும் எவரும் வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லையா, காணிகளை வழங்கவில்லையா,

இந்த நிகழ்வின்போது 50 குடும்பங்களுக்கு  வீட்டு உறுதிப்பத்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு பத்திரம் வழங்கப்பட்டது. உண்மையில் அது வீட்டு உறுதிப்பத்திரம் அல்ல அது ஒப்பந்த பத்திரம், அந்த பத்திரத்தில் ' குறித்த வீட்டை விற்கவோ அல்லது உரிமை கோரவோ முடியாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரம் முக்கியமானது.பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதில் பெருந்தோட்ட கம்பனிகளே பிரதான தடையாக  செயற்படுகின்றன.ஆகவே இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியில் தீர்வு காண வேண்டும்.

பெருந்தோட்டத் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை காலத்தை நீட்டிப்பதற்கு தோட்ட கம்பனிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. உண்மையில் இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு. கடந்த 20 ஆண்டுகாலமாக  20 தோட்டக் கம்பனிகளில் 16 கம்பனிகள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகவே குறிப்பிடுகின்றன. 4 கம்பனிகள் மாத்திரமே இலாப கணக்கை காண்பிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில் தோட்ட கம்பனிகளுக்கான குத்தகை காலத்தை 2040 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பது முற்றிலும் தவறானது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் 1 தடவை மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆகவே தோட்டக் கம்பனிகளுடனான குத்தகை காலம் தொடர்பில் தற்போது ஏன் அவசரமாக தீர்மானம் எடுக்க வேண்டும்.

தோட்ட மக்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை போன்று பணிச்சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சம்பள அதிகரிப்புக்காக அரசாங்கம் தோட்டக் கம்பனிகளிடம் விலை போயுள்ளது.  கடந்த அரசாங்கங்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டாலும் இந்த குத்தகை காலத்தை அதிகரிக்க  எவரும் முயற்சிக்கவில்லை. ஆகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40
news-image

எரிபொருள் விநியோக நெருக்கடி: நாடளாவிய ரீதியில்...

2026-10-11 15:24:39