20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின் ஊழியர் சேமலாப நிதி: ரூ.4,500 மில்லியன் இன்று வழங்கப்படும் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!

09 Sep, 2026 | 05:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த 20 வருட காலமாக நிலுவையிலிருந்த மலையக மக்களுக்கான ஊழியர் சேமலாப நிதி நிலுவைப் பணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்றைய தினம் அந்த மக்களுக்கு  பெற்றுக் கொடுக்கவுள்ளது. இதன்போது 4500மில்லியன் ரூபா அந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) பிரதமரிடமான வினா நேரத்தில் மனோ கணேசன் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் சார்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் எல்கடுவ தோட்ட நிறுவனம் ஆகிய மூன்று அரச தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் 10,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமலிருந்த 4,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டரீதியான நிலுவைத் தொகையை  வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இந்த நிலுவை கொடுப்பனவுகளை வழங்கும்  நிகழ்வு இன்று கண்டி மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட மக்கள் ஓய்வுபெற்ற பின்னரும், முதிய வயதிலும் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் சுகாதார சவால்களைக் கருத்திற் கொண்டு, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால்   சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, அரச தோட்டக் கூட்டுத்தாபனத்தின் 3,000 ஊழியர்களுக்கு 1,961 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையும், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் 6,123 ஊழியர்களுக்கு 2,024 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையும், எல்கடுவ தோட்ட நிறுவனத்தின் 1,000 ஊழியர்களுக்கு 503 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையும்,  சுமார் 4,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, குறிப்பாக மலையகத் தோட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40