கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனத் துறையில் சிறந்து விளங்கும் DIMO நிறுவனம், TATA வணிக வாகனங்கள், TATA பயணிகள் வாகனங்கள் மற்றும் Mercedes-Benz பயணிகள் வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக நிதியுதவித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்காக Union Bank PLC உடன் கைகோர்த்துள்ளது.
Union Bank இனால் வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளையும் DIMO நிறுவனத்தின் விரிவான வாகனச் சலுகைகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும் வசதியையும் வழங்கி, வாகன உரிமையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு இந்த கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டாண்மையின் மூலம், DIMO நிறுவனத்திடமிருந்து தகுதியான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முன்னுரிமையான நிதித் தீர்வுகள், தெரிவு செய்யப்பட்ட கட்டணங்களின் நீக்கங்கள், நெகிழ்வான குத்தகைத் தீர்வுகள் உள்ளிட்ட பெறுமதிசேர் நிதிச் சேவைகள் உட்பட Union Bank இனால் வழங்கப்படும் பிரத்தியேக நிதி நன்மைகளைப் பெறுவர்.
இது குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், "DIMO ஆகிய எமது நோக்கம், 'கனவுகள் மற்றும் இலட்சியங்களுக்கு வலுவூட்டுவதாகும்' என்பதுடன் இந்த கூட்டாண்மை அந்த உறுதிப்பாட்டின் அர்த்தமுள்ள பிரதிபலிப்பாகும்.
எமது உலகத் தரம் வாய்ந்த வாகனத் தயாரிப்புகளை Union Bank இன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளுடன் ஒன்றிணைப்பதன் மூலம், நாம் தரமான போக்குவரத்தை மக்களால் மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறோம்.
அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள தனிநபர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் தமது இலட்சியங்களை நம்பிக்கையுடன் அடைவதற்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகிறோம்." என்றார்.
அது மாத்திரமன்றி, இதில் பங்கேற்கும் வாகன வர்த்தகநாமங்களில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல நன்மைகளை DIMO நிறுவனம் விரிவுபடுத்தும்.
தயாரிப்பு விளக்கங்கள், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் போக்குவரத்து வாகனங்களை செலுத்திப் பார்ப்பதற்கான (test drives) வசதிகள், வீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான 24x7 அவசர உதவி மற்றும் வாகன உரிமையாளரின் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஏனைய பிரத்தியேக நன்மைகள் உள்ளிட்ட பெறுமதிசேர் சேவைகளை வாடிக்கையாளர்களால் அனுபவிக்க முடியும். இக்கூட்டாண்மையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட TATA வணிக வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் விசேட சலுகைகளுக்கும் தகுதி பெறுவார்கள்.
இது குறித்து Union Bank இன் பிரதம வணிக அதிகாரியான அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில்,
"முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் நிதித் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதே எமது நோக்கத்தின் மையமாக இருந்து வருகிறது.
இந்த கூட்டணியின் மூலம், வாகன நிதியுதவியை மேலும் அணுகக்கூடியதாகவும், வசதியானதாகவும், கட்டுப்படியான விலையிலும் மாற்றுகிறோம்.
இதன் மூலம் அதிகளவான இலங்கையர்கள் தமது வாகனக் கனவுகளை அடைந்து, நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல அதிகாரமளிக்கிறோம்." என்றார்.
நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாகன உரிமைக்கான அனுபவத்தை மேம்படுத்துவதற்கான DIMO மற்றும் Union Bank ஆகிய நிறுவனங்களின் ஒரே வகையிலான அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை எடுத்துக் காட்டுகிறது.
DIMO நிறுவனத்தின் நம்பகமான வாகன நிபுணத்துவம் மற்றும் Union Bank இன் நிதித் திறன்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட புத்தாக்கமான, பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வுகள் மூலம் உலகத் தரம் வாய்ந்த வாகன வசதிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையை இந்த கூட்டணியானது பிரதிபலிக்கிறது.
நம்பகமான வாகன வர்த்தகநாமங்களை, வடிவமைக்கப்பட்ட நிதிச் சலுகைகளுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், வாகன உரிமைக்கான அனுபவத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள் தமது இலட்சியங்களை நம்பிக்கையுடன் அடைய அதிகாரமளிக்கவும், இலங்கையின் வாகனத் துறையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் இந்த கூட்டாண்மையானது தயாராக உள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM