திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல் கடற்படையினரை ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

09 Sep, 2026 | 05:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலுக்குள்ளாகி திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்  ஈரான் கப்பலில் இருக்கும் 3 கடற்படையினரையும் ஈரானுக்கு அனுப்பிவைக்குமாறு ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோலை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈரானின்  கப்பல் ஒன்று எமது கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியபோது, அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த கப்பலையும் அதில் இருந்த ஈரான் கடற்படையினரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தது. சர்வதேச சமவாயத்தின் அடிப்படையில் இந்த விடயத்தில் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேநேம் ஈரான் கப்பலுக்கு உதவி செய்வதன் மூலம் இடம்பெறும் யுத்தத்தில் யாருக்கும் சார்ப்பாக நாங்கள் இருக்கப்போவதில்லை. நடுநிலையான போக்கையே பின்பற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளாகிய ஈரானின் இராணுவ கப்பல் மார்ச் 6ஆம் தகதி திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு இலங்கை கடற்படை, கப்பலுக்கும் அதில் இருந்த  படையினருக்கும் உதவிகளை செய்து வருவதாக  ஈரான் தெரிவித்திருந்தது. அதேநேரம். ஈரான் கப்பலுக்கு உதவுவதற்கு எடுத்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி அன்று தெரிவித்திருந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறேன்.  

அதேநேரம் ஈரானிய தூதரகம் தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இந்த கப்பலில் இருக்கும் 3 படையினர் மிகவும் மன ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்த 3 படை வீரர்களுக்கு  பதிலாக வேறு 3 படை வீரர்களை கப்பலில் நிறுத்திவிட்டு, அந்த 3பேரையும் விடுவிக்குமாறு ஈரான் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த  வேண்டுகோள் தொடர்பில் எமது பாதுகாப்பு  அமைச்சு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் எமது வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறது.

இந்தியாவில் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் கப்பலை, இந்தியா எந்த பிரச்சினையும் இல்லாமல் ஈரான் கப்பலை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. அதனால் வெளிவிவகார அமைச்சு, குறித்த ஈரான் கப்பலில் இருக்கும் 3 வீரர்களையும் அவர்களின் நாட்டுக்கு அனுப்புவதற்கும் அதற்கு பதிலாக வேறு 3 படை வீரர்களை வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40