(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் ஊடாக அரசாங்கம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கிறது. இந்த சட்டத்தால் நாடும் அழியும், எதிர்கட்சிகளும் அழியும். இதன் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் வெலிக்கடை சிறையில் இருந்தேன். அங்கு மத்திய வங்கி பிணைமுறி மோசடி திருடனை காணவில்லை. சிறை முழுவதும் தேடினேன். அவ்வாறு எவரும் இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையின் அபிலாசையை அங்கு காண கிடைக்கவில்லை. வேறு எங்காவது இருந்தால் கூறுங்கள். அத்துடன் நீங்கள் கூறிய உகண்டாவில் பணத்தை வைத்திருந்த திருடனும் இருக்கவில்லை. வெள்ளைப்பூடு மோசடிக்காரர், சீனி மோசடிக்காரர், கடவுச்சீட்டு மோசடிக்காரர் எவரையும் சிறையில் காணவில்லை.அனைவரும் வெளியில் தான் உள்ளார்கள்.
யுத்தத்தை வென்று அபிவிருத்திகளை செய்த மற்றும் சட்டமூலங்களை நிறைவேற்றி அதிக காலத்திற்கு ஆட்சியில் இருக்க முயன்றவர்கள் 2022ஆம் ஆண்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். மக்களுக்கு பொருத்தமில்லாமல் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்த காரணத்தினாலேயே அவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டன.
அதேபோன்று இப்போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் அரசாங்கத்தின் இருப்புக்காகவே கொண்டு வரப்படுகிறது. இந்த திருத்தம் ஊடாக அரசாங்கம் தனக்குத் தானே குழியை தோண்டிக் கொள்கிறது. இந்த திருத்தத்தால் நாடும் அழியும், எதிர்க்கட்சிகளும் அழியும்.
அத்துடன் சிறைச்சாலை கைதிகளின் உளவியல் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். தேசிய சுதந்திர தினம், வெசாக் தினம், பொசன் தினம், நத்தார் பண்டிகை காலங்களில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னர் அவ்வாறு அந்த சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள போதும், அவருக்கு சில காரணங்களுக்காக விடுதலையாக வேண்டிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகின்றது.
2025.05 30ஆம் திகதி சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் போது அவருக்கு அதுவரையில் சிறைத் தண்டனை பெற்ற காலம் குறைவடையும். ஆனால் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட முன்னர் இருந்த 2000 பேர் வரையிலானோருக்கு இந்த நிவாரணம் கிடைக்கவில்லை. இது அநீதியானது. இதனால் இதனை சீர்செய்யக்கூடிய முறைமைகளை தயாரிக்க வேண்டும்.
இதேவேளை 70 வயதுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள் நடக்கக்கூடிய முடியாதவர்களாக இருக்கின்றனர். பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 18 வயதில் வந்த இளைஞன், புனர்வாழ்வு பெற்று வெளியில் விடப்படாமல் 54 வயதில் சிறையிலேயே உயிரிழந்த சம்பவமொன்றை நான் சிறையில் அவதானித்தேன். இவ்வாறான விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
அரசாங்கம் தற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த மகிழ்ச்சி சிறிதுகாலமே இருக்கும். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எதனையாவது நான் இழந்திருந்தால், அந்த இழப்புக்கு காரணமாக உங்களில் யாராவது சட்டத்தில் தலையிட்டிருந்தால் அவர்களுக்கு மனைவி இருந்தால், பிள்ளைகள் இருந்தால், தாய் இருந்தால் நான் சாபமிடுகின்றேன். அந்த விடயத்தில் தலையிட்ட அனைவரையும் நான் சபிக்கிறேன் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM