பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை இரத்து செய்யும் தீர்மானத்திற்கு வரவேற்பு - அஜித் பி பெரேரா!

09 Sep, 2026 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

யுத்தக் காலத்தின்போது பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதி தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.தற்போதைய சூழலில் அந்த பதவி அவசியமற்றது. ஆகவே இந்த பதவியை இரத்துச் செய்வது சிறந்தது. அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின்  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. கொழும்பு துறைமுகத்தில் அண்மையில் கொள்கலன் ஒன்றில் இருந்து 800  கோடி  ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு தலைமையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு, இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டது. ஆனால் தற்போது பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் முறையற்றது என்று  ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள்  தொடர்பில்  ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு இதுவரையில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இந்த கொள்கலன்களில் இருந்தது என்னவென்பது என்பதை அரசாங்கம்  ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

யுத்தக் காலத்தின்போது பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதி தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.தற்போதைய சூழலில் அ ந்த பதவி அவசியமற்றது. ஆகவே இந்த பதவியை இரத்துச் செய்வது சிறந்தது. அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்கிறோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு  மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தமது  தேர்தல் விஞ்ஞாபானத்தில் பலவிடயங்களை குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் அவை ஏதும் நிறைவேற்றப்படவில்லை. பழைய நடைமுறைகளையே பின்பற்றுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் விரைவான தீர்மானம்...

2026-10-12 13:46:56
news-image

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க...

2026-10-12 13:49:45
news-image

பாடசாலைப் பொருட்கள், அத்தியாவசிய உணவுகளுக்கு வற்...

2026-10-12 17:26:58
news-image

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம்: அரசாங்கத்தை...

2026-10-12 17:38:36
news-image

மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக் குறைவால்...

2026-10-12 17:23:28
news-image

இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான...

2026-10-12 22:12:08
news-image

கொரிய தன்னார்வ அமைப்பின் விசேட பிரதிநிதிகள்...

2026-10-12 22:07:54
news-image

எமது அரசாங்கத்தில் பாதாள உலகக் குழுக்களுக்கு...

2026-10-12 14:10:40
news-image

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலுக்கும் விமர்சனங்களுக்கும் முன்னுரிமையளித்துள்ளது...

2026-10-12 12:59:44
news-image

சிறைச்சாலை நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்யுமாறு...

2026-10-12 17:39:35
news-image

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த...

2026-10-12 19:42:21
news-image

கலாலயா கலாசார மற்றும் இளைஞர் அபிவிருத்தி...

2026-10-12 18:40:21