நாட்டில் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தும் திட்­டத்­தி­லேயே   புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை கூட்டு எதி­ரணி மேற்­கொண்டு வரு­கின்­றது. அதன் பின்­ன­ணி­யி­லேயே   புதிய அர­சி­ய­ல­மைப்பை சுருட்­டிக்­கொள்­ளு­மாறு மஹிந்த ராஜபக் ஷ அறி­வித்­துள்ளார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக இன்று பலரும் பல்­வேறு கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். அத­ன­டிப்­ப­டையில் மஹிந்த ராஜபக் ஷவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அறிக்­கை­யொன்றை விடுத்­துள்ளார். அதில் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவை­யில்லை. இதனை அர­சாங்கம் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை ஏற்­ப­டுத்தும் பட்­சத்தில் சிங்­கள மக்கள் மத்­தியில் முரண்­பா­டுகள் ஏற்­படும் என தெரி­வித்­துள்ளார். புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக அர­சாங்கம் பாரி­ய­தொரு தவறை மேற்­கொள்ள முயற்­சிக்­கின்­றது என தெரி­விப்­ப­தற்கே அவர் எதிர்­பார்க்­கின்றார்.

அத்­துடன் மகா­நா­யக்க தேரர்­களை தூண்டி அதன் மூலம் அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­களை நிறுத்­தலாம் என்ற நோக்­கத்தில் அண்­மையில் தினேஷ் குண­வர்த்­தன மல்­வத்து மகாநா­யக்க தேரரை சந்­தித்து கதைத்­துள்ளார். 

ஆனால் மகாநா­யக்க தேரர் அவ­ருக்கு தெரி­வித்த கருத்­துக்கள் வர­வேற்­கத்­தக்­க­தாகும். இவ்­வாறு இவர்கள் நடந்­து­கொள்­வது இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காகும் என்­பது இவர்­களின் நட­வ­டிக்­கைகள் மூலம் தெளி­வாக தெரிந்­து­கொள்­ளலாம். 

அத்­துடன் மகாநா­யக்க தேரர்­களை தூண்டி பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்ட இவர்­களின் முயற்சி தோல்­வி­ய­டைந்­ததும் தற்­போது அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஊடாக வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக பிர­சாரம் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இணைந்­தி­ருந்த வடக்கு கிழக்கு உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பின் பிர­கா­ரமே பிரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதனை மீண்டும் இணைப்­ப­தாக இருந்தால் அந்த மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை பெற­வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால் வடக்கு கிழக்கு இணைப்பை அரசியலமைப்புடன் தொடர்பு படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டு இனங்களுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதே இவர்களின் உண்மையான நோக்கமாகும் என்றார்.