கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

09 Sep, 2026 | 03:43 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய பிள்ளைகள் பாடசாலையில் கல்வி கற்று அதிக பேறுகளுடன் சித்தியடைந்து புலமைப்பரிசில் பெற வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோர்களின் பெருவிருப்பமாக இருக்கும். ஆனால் பிள்ளைகளுக்கோ கைபேசி, நண்பர்கள் இருந்தால் போதும் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக - பருவக்கால எண்ணமாக - இருக்கும். பெற்றோர்கள் 'படி, படி' என்று அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும், அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் கல்வி கற்பது கடினமான விடயமாக மாறிவிடும்.

ஒரே பிள்ளை என்பதால், ஒரு எல்லைக்கு மேல் பெற்றோர்களும் தங்களுடைய அழுத்தங்களை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அந்தப் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் அல்லவா..? இதனால் கவலை கொள்ளும் பெற்றோர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள், அவர்களுடைய பிள்ளைகள் கல்வியறிவில் சிறந்து விளங்குவதற்கான சூட்சமக் குறிப்பு ஒன்றினை வழங்கியுள்ளார்கள்.

ஜோதிட நிபுணர்களை அணுகி உங்களது பிள்ளைகளின் கல்வி கற்கும் திறன் குறித்து அறிந்து, அதில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறையை ஆலோசனையாகக் கேளுங்கள்.

வல்லாரைக் கீரையை உணவுப் பட்டியலில் இணைத்துக் கொள்வது, ஹயக்ரீவர் வழிபாடு, சரஸ்வதி வழிபாடு ஆகியவற்றை பின்பற்றியும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் பாலமுருகன் சக்கரத்தை வரைந்து, (சிறிய அளவிலான யந்திரம்) அதனை பாலமுருகன் சன்னதியில் அமாவாசைக்கு முதல் நாள் வைத்து வணங்கிட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அந்தச் சக்கரத்தை சக்கரத்தாழ்வார் சன்னதியில் 11 நாள் வைத்து பூஜை செய்து வணங்கிட வேண்டும். இதனைத் தொடர்ந்து வரும் தசமி திதி நாளன்று அந்தப் பிள்ளையின் கழுத்தில் அந்தச் சக்கரத்தைக் கட்டி விட வேண்டும். அதன் பிறகு அந்தப் பிள்ளை கல்வியில் அளப்பரிய சாதனை படைத்து உயர்கல்வியில் சித்தியடைவதுடன், வாழ்க்கையிலும் அசாதாரணமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46