புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

09 Sep, 2026 | 03:44 PM
image

தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் கன்னடக் கலைஞர்களான சித்து மூலிமணி - ஸ்ரீ வைஷ்ணவ் - சந்தோஷ் - கிருஷ்ணா விஜய் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பிரபல நடிகரான ஆர்யா வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோல்டு கால்' திரைப்படத்தில் சித்து மூலிமணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய், ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பான நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'ஒட்டாரம்' படத்தின்...

2026-10-15 15:00:15
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி'...

2026-10-15 14:59:41
news-image

நடிகர் பிரியன் நடிக்கும் 'வெகுளி' படத்தின்...

2026-10-15 14:15:51
news-image

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த சூரியின் புதிய...

2026-10-15 14:16:31
news-image

நாட்டின் முரண்பாடுகளின் வலிகளை வெளிப்படுத்தும் ‘ரியர்...

2026-10-15 12:00:48
news-image

அலைகளை வென்ற காளி : மண்டாடி!...

2026-10-14 17:19:14
news-image

நடிகர் சசிகுமார் வெளியிட்ட நடிகர் சரணின்...

2026-10-14 15:01:43
news-image

ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல்...

2026-10-14 14:50:07
news-image

கருணாஸ் - வெற்றி இணைந்து மிரட்டும்...

2026-10-13 17:30:54
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஹலோ காதல்'...

2026-10-13 17:28:22
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட நடிகர்...

2026-10-13 17:26:35
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய ஜெய் நடிக்கும் புதிய...

2026-10-13 15:47:21