(க.கிஷாந்தன்)
உலகம் மாற்றம் பெற்று வருகின்றது. ஆகையினால் மனிதனின் வாழ்க்கை தரம் மாற்றம் பெற வேண்டும். மலையக மக்களின் வாழ்வு மாற்றம் பெற வேண்டும் என்றால் தனி வீடு, கல்வி, மின்சாரம் கட்டாயம் தேவை இவை உணர்ந்தே நாம் செயல்பட்டு வருகின்றோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பெங்கடன் சின்ன தோட்டத்தில் மலையக வரலாற்றில் முதல்முறையாக ஒரே இடத்தில் 114 வீடுகளை அமைத்து நவீன கிராமம் அமைக்கும் அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு சமூக ரீதியான விழிப்புணர்வு தேவை. இதற்கு கல்வி அறிவை முன்னெடுக்க வேண்டும். வெளி மாவட்ட மக்களுக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் கிள்ளுகீரைகள் அல்ல.
வெளி மாவட்ட மக்கள் நுவரெலியா மாவட்ட மக்கள் என்றால் வீட்டு வேலைக்கும் தோட்ட வேலைக்கும் தங்களது விடுதி வேலைகளுக்கும் அழைக்கின்றார்கள். இப்பொழுது புதிய ஒரு வேலைக்கும் அழைக்கின்றார்கள். அது தான் சிறுநீரகம் பறிப்பது.
இவ்வாறாக நமது மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதற்கு இனிமேலும் இடமளிக்கப்போவதில்லை. சமூக ரீதியான விழிப்புணர்வு ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் 50000 வீடுகள் கட்டி தர வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக கூறினார். ஆனால் அந்த வீடுகள் லயத்துக்கு மேல் லயம் வைத்த மாடி வீடுகள். ஆகையினால் அதனை நாம் எதிர்த்தோம். இம்மாடி வீடுகள் கட்டி தரப்படும். ஆனால் தேயிலை ஒன்றைக்கூட பிடுங்க விட மாட்டேன் என்பது மஹிந்தவின் கூற்றாக இருந்தது.
ஆனால் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பல தரகர்கள் எங்களிடம் பேரம் பேசினார்கள். ஆனால் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திடம் நானும் திகாம்பரமும் 7 பேர்ச் காணி தனி வீடு எம்மக்களுக்கு தருவதாக இருந்தால் நாம் ஆதரவை தருகின்றோம் என பேரம் பேசினோம். அதேபோன்றும் இன்று ஆட்சி மாற்றமும் பெற்றது. மக்களின் நிலைமையும் மாறி வருகின்றது.
நாம் யாரும் கட்சி பேதம் பேச தேவையில்லை. மூன்று பேரை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தேர்வு செய்தீர்கள். உங்கள் வாக்கு தான் இந்த தனி வீட்டு திட்டத்தை ஆரம்பிக்க சக்தியாக அமைந்தது.
நுவரெலியா மாவட்ட கல்வி வளர்ச்சியில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பெல்மடுல்ல தேசிய பாடசாலை அமைந்துள்ள ஹங்குராங்கெத்த கல்வி வலயம் முதலாம் இடத்திலும் கொத்மலை கல்வி வலயம் இரண்டாம் இடத்திலும் வலப்பனை கல்வி வலயம் மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றது. ஆனால் நுவரெலியா கல்வி வலயம் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு காரணம் இங்கு இருப்பது அனைத்தும் தோட்ட பாடசாலைகள். ஆகையினால் இதனை முன்னேறவைக்க நுவரெலியா கல்வி வலயத்திற்கு தேசிய பாடசாலை ஒன்று அமைத்தே ஆக வேண்டும்.
இதனை மாகாண சபை அங்கீகாரம் பெறுவதற்காக மத்திய மாகாண சபை தமிழ் உறுப்பினர்கள் நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளில் பல்வேறு குறைபாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு காரணம் அரசியல் ரீதியான ஈடுப்பாடு பாடசாலைகளில் இருப்பது தான். மக்களிடம் பணம் வாங்குகின்றார்கள். சீருடை வவுச்சர் கொடுக்கப்படும் ஒரு சில தமிழ் பாடசாலைகளில் இன்னும் பெற்றோர்களிடம் கையளிக்கவில்லை. இவ்வாறான குறைபாடுகள் நிரம்பியே காணப்படுகின்றது. இதனை நிவரத்திக்க வேண்டும் என்றால் முதலில் பாடசாலைகளில் அரசியல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
இன்று மலையக மக்களிடத்தில் அன்பான சூழ்நிலை உருவாக்க வேண்டும். அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்கால பிள்ளைகளின் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது. தோட்டம் என்ற வாரத்தை இனிமேல் தேவையில்லை. கிராம மக்கள் என்ற வார்த்தை எமக்கு தேவை. மலையக மக்களும் வடக்கு, கிழக்கு மக்களுடன் உறவு வைத்து நல்ல முறையில் பேணப்படுவதற்கு நானும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அமைச்சின் ஊடாக செயலாற்றி வருகின்றேன்.
தோட்டப்பகுதியில் தனி வீடு அமைப்பதற்கு மீரியாபெத்த மண்சரிவே ஒரு முன்னு உதாரணமாக திகழ்ந்தது. நாம் எந்த மொழியிலும் பேசினாலும் பரவாயில்லை. தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் என மொழியில் ஒன்றுப்பட்டவர்களாக எதிர்காலத்தில் செயலாற்ற வேண்டும் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM