'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 'ரெட்ட தல' படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை சித்தி இத்னானி கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, 'சினிமாவாலா' சதீஷ், சசி செல்வராஜ், ஆர்ஜே தீபக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். ஹரி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எம். மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு வகையான போஸ்டர்களை படக் குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் ரசிகர்களை கவரும் விடயங்கள் கொமர்ஷல் அம்சங்களுடன் இடம்பெற்றிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM