(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாடு முழுவதும் நாளாந்தம் கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருவதன் காரணமாக உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருவதுடன், இவை தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகவும் மக்களின் வாழ்வு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
என்றாலும் இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(09) விசேட கூற்றொன்றை முன்வைத்து தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க முற்பட்டு குறிப்பிடுகையில்,
நிலையியற் கட்டளைகள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஒழுங்கு பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவிப்பதற்கு சபை முதல்வருக்கு சந்தர்ப்பம் வழங்கியது போன்று எதிர்க்கட்சிக்கும் சந்தர்ப்பம் தர வேண்டும்.
தற்சமயம் நாளாந்தம் நாடு முழுவதும் கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருவதன் காரணமாக உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருவதுடன், இவை தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகவும் அமைந்து காணப்படுகின்றன. இதனால் நாளாந்தம் மக்களின் வாழ்வு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது
இந்தத் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டிய வேளையில் குறுக்கிட்ட சபாநாயகர், இதில் ஒழுங்கு பிரச்சினை இல்லை என தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவரின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எழுந்த தயாசிறி ஜயசேகர எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அதற்கு இடமளிப்பது பாராளுமன்ற சம்பிரதாயமாகும். அதனால் சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு மதிப்பளித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
என்றாலும் சபாநாயகர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க எதிர்கட்சித் தலைவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM