மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

09 Sep, 2026 | 02:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையிலான நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி எதுவும் உள்ளதா? இரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் சேவையை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்   பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09)  நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் மன்னார் மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் இடையே நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டம், இரண்டு நாடுகளுக்கிடையேயான பண்பாட்டு, சமூக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த சேவை பிராந்திய இணைப்பை மேம்படுத்தி, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட உள்ளது.

இலங்கையின் மன்னார் மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் இடையேயான நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதா, மற்றும் இதன் மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி எதுவும் உள்ளதா?

இந்த கப்பல் சேவையின் பொருளாதார சமூக மற்றும் பாதுகாப்பு தாக்கங்களைக் குறித்த எந்தவொரு சாத்தியக்கூறுகள் அல்லது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

இந்த கப்பல் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு மற்றும் முன்மொழியப்பட்ட கட்டமைப்பு துறைமுக வளங்கள் மேம்பாடு மற்றும் சுங்க செயல்முறைகள் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் விளக்கமளிப்பாரா?

பயணிகள் பாதுகாப்பு,குடியுரிமை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதில் ஏற்படக்கூடிய சவால்களை அரசு எவ்வாறு கையாள திட்டமிடுகிறது? இந்த கப்பல் சேவையால் வட மாகாண மக்கள் மற்றும் இலங்கை-இந்திய இடையேயான பரஸ்பர உறவுகளில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்றார்.

இதன்போது எழுந்து பதிலளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்படுகிறது. இது தொடர்பான முழுமையான விடயங்களை இரண்டு வாரங்களில் முன்வைக்கின்றேன் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40