67ஆவது அரச இலக்கிய விருது விழா : தமிழ்ப் பிரிவுக்கான "சாஹித்யரத்னா" உயரிய விருதினை கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கு ஜனாதிபதி வழங்கிவைப்பு 

09 Sep, 2026 | 02:04 PM
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற 67ஆவது அரச இலக்கிய விருது விழாவில் "சாஹித்யரத்னா" உயரிய விருதினை தமிழ்மொழிப் பிரிவுக்காக கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கு ஜனாதிபதி வழங்கிவைத்தார். 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புக்களால் வளப்படுத்திய இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் 67ஆவது அரச இலக்கிய விருது விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலக்கியப் படைப்பாளிகளுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் "சாஹித்யரத்ன" உயரிய விருதினை தமிழ்மொழிப் பிரிவுக்காக, கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் பெற்றுக்கொண்டார். 

மேலும், "சாஹித்யரத்னா" உயரிய விருதுகளை சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்கு, ஆங்கில மொழிப் பிரிவில்   பேராசிரியர் ஈ.ஏ. காமினி பொன்சேக்கா ஆகியோருக்கும் ஜனாதிபதி வழங்கிவைத்தார். 

இந்த விருதுகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிவைப்பதையும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உடனிருப்பதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43