ஹொரனை, வாகவத்தை களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகத்தில், தலைக்கவவசம் இன்றி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஹொரனை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றைப் பார்த்துவிட்டு, அதிகாலை 2:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் இடம்பெற்ற இச் சம்பவத்தை யாரும் அவதானிக்கவில்லை எனவும், வீதியில் விபத்துக்குள்ளாகி கிடந்த நபரை கண்ட நபரொருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய பின்னரே சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, மொபைல் செயலி மூலம் வாடகைக்கு அமர்த்திய மோட்டார் சைக்கிளொன்றில் வாகவத்தை பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிக வேகத்தில் பயணித்துள்ளார்.
இந்த விபத்து நடந்த போது, அவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது நண்பர் இந்த சம்பவத்தைப் பார்த்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஹொரனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM